
தமிழ்நாட்டில் வணிகர்களுக்காகவும் , வணிகர்களை காக்கவும், வணிகர்களுக்காக குரல் கொடுக்கவும் வணிகர் சங்கங்களை ஒருங்கிணைத்து பேரமைப்பின், நிறுவனத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்களால் உருவாக்கப் பட்டதுதான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு.
வணிகர்களிடையே ஒற்றுமை வேண்டும், வணிகம் காக்கப்படவேண்டும், வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும், வணிகர் நலன் காக்கப்பட வேண்டும் என்ற தாரக மந்திரத்தை முழு மூச்சாக கொண்ட வணிகர்களின் சொத்தாக திகழ்பவர் ஏ.எம்.விக்கிரமராஜா எனும் மாபெரும் சக்தி. தமிழக வணிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற ஒரே தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வணிக சொந்தங்களின் மனதை குறிப்பரிந்து செயல்படுத்தும் ஆளுமை பெற்றவர்
தூத்துக்குடி மாவட்டம் இடையன்விளை கிராமத்திலிருந்து 45 ஆண்டுகளுக்கு முன்பு, வணிகர் நலன்காக்க இறைவனால் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்ட கருப்பு நெருப்பு ஏ.எம்.விக்கிரமராஜா. இன்று தமிழகத்தில் 60 மாவட்டங்கள், 6,800 கிளைச்சங்கங்கள், 28 லட்சம் வணிகக் குடும்பங்களை கொண்ட தமிழகத்தின் தலையாய அமைப்பான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாபெரும் ஒப்பற்ற தலைவர்.
வணிகர்களிடையே ஒற்றுமை வேண்டும், வணிகம் காக்கப்படவேண்டும், வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும், வணிகர் நலன் காக்கப்பட வேண்டும் என்ற தாரக மந்திரத்தை முழு மூச்சாக கொண்ட வணிகர்களின் சொத்தாக திகழ்பவர் ஏ.எம்.விக்கிரமராஜா எனும் மாபெரும் சக்தி. தமிழக வணிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற ஒரே தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வணிக சொந்தங்களின் மனதை குறிப்பரிந்து செயல்படுத்தும் ஆளுமை பெற்றவர்.
முழுவதும் படிக்க...
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளராக பணியாற்றி வரும் திரு வி.கோவிந்தராஜுலு அவர்கள் வணிகர் நற்பணியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருபவர் திருச்சியில் பகுதி செயலாளராக வணிகர் சங்க பணியினை துவங்கியவர்.
மேலும் அறியபொருளாளர்
எல்லா புகழும் இறைவனுக்கே! அவனது பேரருளால் நன்மைக்கே!! எனும் கொள்கையோடு சென்னை, பூவிருந்தவல்லி பொது வியாபாரிகள் சங்கத்தின் ஒப்பற்றத் தலைவராக கடந்த 38 ஆண்டுகளாக தலைமை பொறுப்பேற்று சங்கத்தை சீரும் சிறப்புமாக நடத்தி வருபவர்.
மேலும் அறிய
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளராக பணியாற்றி வரும் திரு Ve.கோவிந்தராஜுலு அவர்கள் வணிகர் நற்பணியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருபவர் திருச்சியில் பகுதி செயலாளராக வணிகர் சங்க பணியினை துவங்கியவர்.
திருச்சி மாவட்ட தலைவர், திருச்சி மண்டல தலைவர், மாநில செயலாளர், மாநில பொருளாளர், மாநில பொதுச்செயலாளர் என படிப்படியாக வளர்ந்து உயர்ந்தவர் பல்வேறு பொருட்களுக்கு வரிச்சலுகையும், வரி விலக்கும் பெற காரணமாக அமைந்தவர். அரசின் அதிகார அமைப்புகளோடு சுமூகமான நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு வணிகர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர். அதே நேரம் வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடவும் தயங்காதவர். இதன் நற்பணிகளோடு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் எலக்ட்ரானிக் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்களை அமைத்து தொழிலதிபராகவும் வலம் வரக்கூடியவர்.
இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்பவர். திருச்சியில் இயங்கி வரும் பல்வேறு சங்கங்களுக்கு தலைவராகவும் கௌரவ தலைவராகவும் செயல்பட்டு வருபவர். சிறப்பான வணிகர் சங்க பணிகளை பாராட்டி அமெரிக்காவின் உலக தமிழ் பல்கலைகழகத்தால் கடந்த 2008ம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.
பொருளாளர்
எல்லா புகழும் இறைவனுக்கே! அவனது பேரருளால் நன்மைக்கே!! எனும் கொள்கையோடு சென்னை, பூவிருந்தவல்லி பொது வியாபாரிகள் சங்கத்தின் ஒப்பற்றத் தலைவராக கடந்த 38 ஆண்டுகளாக தலைமை பொறுப்பேற்று சங்கத்தை சீரும் சிறப்புமாக நடத்தி வருபவர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலப்பொருளாளராக பொறுப்பேற்ற நாள் முதல் மாநிலத்தலைவர் எவ்வழியோ அவ்வழியே குறிப்பரிந்து செயல்பட்டு, மாநிலத்தலைவரோடு இணைந்து பேரமைப்பை சீர்மிகு செம்மையோடு வழிநடத்தி வருபவர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா. தனது அகவை 75-லும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வணிகர்களின் உரிமைக் குரலாம் பேரமைப்பு முரசை தமிழகம் முழுவதும் ஒலிக்கச்செய்கிறார்.

மாநில தலைமை செயலாளர்

மாநில கூடுதல் செயலாளர்

மாநில கூடுதல் செயலாளர்













