Namma Exspo

September 12, 2025

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்திடும்
“நம்ம எக்ஸ்போ”

முதற்கண் விழாக்கால நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வு கொள்கிறோம். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வணிக ஒற்றுமையையும், வணிக பாதுகாப்பையும் நிலைநிறுத்திட முதல் முயற்சியாக பேரமைப்பின் முதல் வர்த்தக கண்காட்சி “நம்ம எக்ஸ்போ” எனும் கண்காட்சி நிகழ்ச்சி தங்களைப் போன்ற வணிக நிறுவனங்களின் பேராதரவுடன் முதன்முறையாக சென்னையில் நடக்க இருக்கின்றது. நம்ம எக்ஸ்போ கண்காட்சி மிகச்சிறப்பாகவும், மிளிர்வோடும் நடைபெற்றிடவும், பங்கேற்கும் அனைவருக்கும் பெருமை சேர்த்திடவும் தங்களை ஒரு ஸ்பான்சராகவோ அல்லது கண்காட்சி பங்கேற்பாளராகவோ பங்கேற்க தங்களை எக்ஸ்போ நிகழ்ச்சிக்கு அழைப்பதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பெருமகிழ்வு கொள்கின்றது.

2025 செப்டம்பர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் சென்னை வர்த்தக மையம் (டிரேட் சென்டரில்) ஹால்1, 2, நந்தம்பாக்கத்தில் நம்ம எக்ஸ்போ நடக்கவிருக்கின்றது. இக்கண்காட்சியின் மூலம் வர்த்தகர்கள் வணிகம் மற்றும் சந்தை பொருட்கள், அண்மைக்கால தெரிவு நிலையை மேம்படுத்திக்கொள்வதற்கும், குறிப்பாக நுகர்வோர் சந்தையில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வணிக வாய்ப்பை பெருக்கிக் கொள்வதற்கும் இந்நிகழ்ச்சி ஓர் ஊக்கமளிக்கும் நிகழ்வாக இந்த எக்ஸ்போ&வை நடத்திட பேரமைப்பு முனைந்திருக்கின்றது. இந்த எக்ஸ்போவிற்கான ஸ்பான்சர்ஷிப் மூலமும், பங்கேற்பாளர் மூலமும் தங்களின் மதிப்புமிகு ஆதரவை நாங்கள் நாடி வருகின்றோம். இந்நிகழ்வில் தங்கள் நிறுவன பிராண்டுகள் மற்றும் தாங்கள் தருகிற விற்பனை சலுகைகளை தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது பிற மாநிலங்கள் முழுவதும், பேசப்படும் வகையில் தங்களின் பொருட்களை காட்சிப்படுத்த ஸ்டால்களை முன்பதிவு செய்து நம்ம எக்ஸ்போ நிகழ்ச்சி ஒரு வெற்றி நிகழ்ச்சியாக மாநிலம் முழுவதும் பேசப்படும் நிகழ்வாக எடுத்துச்செல்ல உறுதுணையாக இருக்கும்.

நடைபெற இருக்கும் நம்ம எக்ஸ்போ கண்காட்சி சம்பந்தமான விபரங்கள் அல்லது ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால் தொலைபேசியில் எங்களை அழைக்கலாம். (செல் 984024798, 8877339941)

நம்ம எக்ஸ்போ வெற்றிகரமான ஓர் வர்த்தக கண்காட்சியாக நடைபெற இருப்பதை நாம் அனைவரும் ஒற்றுமையோடு உறுதிசெய்வோம்.  வணிகர்களின் பலம் மற்றும் வணிகர்களின் ஒற்றுமை அகில இந்தியாவிற்கே  வெளிப்படுத்திட முன்னுதாரணமாக இந்த நிகழ்ச்சியை நாம் முன்னெடுத்து செல்வதன் மூலம் உறுதிபடுத்துவோம்.  தங்களின் ஆதரவோடும் ஒற்றுமையோடும்  "நம்ம எக்ஸ்போ"  நிகழ்ச்சியை வெற்றி எக்ஸ்போவாக நடத்திக் காட்டுவோம். தங்களின் நேரடியான ஒத்துழைப்பு மற்றும் உதவிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி! 
/