மாண்புமிகு பாரதப்பிரதமர் 15-8-2025 தனது தனது சுதந்திரதின உரையில், மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தீபாவளிப்பரிசாக கொண்டுவரப்படும் என அறிவித்திருப்பது பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். 2017-ஆம் ஆண்டு முதல் பேரமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது ஜி.எஸ்.டி குறைப்புக்கான அரசின் நடவடிக்கைகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மனப்பூர்வமாக வரவேற்று, தனது நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கின்றது.

பேரமைப்பின் நீண்டகால கோரிக்கைகள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டுமென மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் தலைமையில் பேரமைப்பு நிர்வாகிகள் 13-9-2025 அன்று சென்னையில் சந்தித்து ஜி.எஸ்.டி சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனு அளித்தார்.
