தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொதுக்குழு கூட்டம் 16&9&2025 செவ்வாய்கிழமை மறைமலைநகர், டிவிவிபி திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவில் மாவட்டத் தலைவர் எம்.இந்திரஜித் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் பங்கேற்று, மாவட்ட புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்.

