இந்திய பொருளாதாரம் முற்றிலும் விவசாயம் மற்றும் வணிகம் சார்ந்த ஒன்று என்பது மத்திய,மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டுள்ள மறுக்க முடியாத உண்மை என்பது பத்திரிகையாளர்கள் அறிந்ததே. தேசிய வரிவருவாயில் வணிகர்களின் பங்கு 65% ஆகும். இந்திய பாரம்பரிய சிறு வணிகம் முற்றிலும் அழிக்கப்பட்டு பொருளாதார சமநிலை மாறி, கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தினால் தனிமனித பொருளாதார குவிப்புக்கு வழிவகுத்து, சீர்குலைவு நிகழ்வதற்கு முன், சில்லரை கிராமப்புர வணிகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் தொலைநோக்கு சிந்தனையுடனே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முன்னோட்டமாக 30-8-2025 சனிக்கிழமை காலை 10.35 மளியளவில் திருச்சி, வயலூரில் அமையவுள்ள டி-மார்ட் நிறுவனத்தை எதிர்த்து மாபெரும் அடையாள முற்றுகைப்போராட்டம் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.

மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, மாநில தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், பேரமைப்பின் மண்டலத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், துணை நிர்வாகிகள், இளைஞர்அணி, பழையபொருள் அணி, இளம் தொழில் முனைவோர் அமைப்பு, சூப்பர் மார்க்கெட் சங்க நிர்வாகிகள் அனைவரும் தமிழகம் முழுவதும் உள்ள பேரமைப்பின் எல்லைக்குட்பட்ட 60 மாவட்டங்களிலிருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக பங்கேற்றனர். மேலும், பேரமைப்பின் ஒருங்கிணைப்பு சங்கங்களான தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம், தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு தங்கம் வெள்ளி, வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு டிஜிட்டல் சங்கம், தமிழ்நாடு பர்னிச்சர் அசோசியேஷன்ஸ், இருச்சக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் மற்றும் இதர தொழில் வணிக சங்க நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்
தமிழகத்தில் மட்டும் 27 லட்சம் சில்லரை வணிகர்கள் கிராமம் முதல் நகரம் வரை பரந்து விரிந்து ஏறத்தாழ 1.5 கோடி வாக்காளர்களை உள்ளடக்கிய வணிகக் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முற்றுகைப் போராட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

இந்திய அரசு, அமெரிக்க ஏகாதிபத்திய 50% வர்த்தக தீவிரவாதத்திற்கு எதிர்ப்பான நிலை எடுத்திருப்பதற்கு ஒப்பான வர்த்தகப் போர் என்றே இதனை குறிப்பிடலாம். அந்நிய நாட்டின் ஏகாதிபத்தியத்தைப்போல தனி ஒரு கார்ப்பரேட் கம்பெனி, தனிமனித பொருளாதார குவிப்பை தடுத்து நிறுத்துவதற்கான முன்னெடுப்பை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அடையாள முற்றுகைப் போராட்டமாக நடத்தியுள்ளது. தனி மனித பொருளாதாரக் குவிப்பினால் பொருளாதார சமநிலை முற்றிலும் சீர்குலைந்துபோகும் என்பதோடு, வாழ்வாதார இழப்பு, வருமான இழப்பு, வேலைவாய்பின்மை, மொத்தத்தில் வறுமை நிலைக்கு சிறு,குறு, அடித்தட்டு வணிகர்கள் தள்ளப்படுவார்கள் என்பதனால், அதனை தடுத்து நிறுத்திடும் தொலைநோக்கு சிந்தனையுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இம்முற்றுகை போராட்டத்தை முழுமையான வெற்றி போராட்டமாக நடத்தியுள்ளது. சில்லரை வணிகத்தை அச்சுறுத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும், வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இம்முற்றுகை போராட்டம் அமைந்துள்ளது என்பது நிச்சயம்.
மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்து சட்ட விதிகளில் திருத்தம் செய்து, கார்ப்பரேட் கம்பெனிகளின் சில்லரை வணிக ஆதிக்கத்தை அடியோடு தடுத்த நிறுத்த வேண்டும் என்பதே பேரமைப்பின் நோக்கமும் கோரிக்கையுமாகும். கோரிக்கைக்கு தீர்வு காணும் வரை போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்பதையும் மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை உணர்வோடு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது கருத்தை பதிவு செய்கின்றது. போராட்டத்தின் தீவிரம் உணாந்து சில்லரை வணிகர்களின் நிலையை அறிந்து மத்திய, மாநில அரசுகள் விரைந்து பரிசீலித்து பாரம்பரிய இந்திய சில்லரை வணிகத்தை பாதுகாத்திட சட்ட வரைவுகள் மேற்கொள்ள வேண்டுமென இப்போராட்டத்தின் மூலம் வலியுறுத்துகின்றது.
மொத்தத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சில்லரை வணிகத்தை தீவிரமாக எதிர்ப்போம், உள்ளுர் வணிகத்தை உறுதியாக வளர்ப்போம். பொதுமக்களும் அயல்நாட்டு உற்பத்திப் பொருட்களை தவிர்த்து, தாய்நாட்டில் தயாராகும் நமது உள்ளுர் பொருட்களையே வாங்கிட சூளுரைப்போம். நன்றி!