18-12-2025 இன்று தேனி மாவட்டம், வீரபாண்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42-வது மாநிலப் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் தலைமையில் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு துவக்கவுரையாற்றினார். மாநிலப்பொருளாளர் ஹாஜி.ஏ.எம்.சதக்கத்துல்லா ஆண்டறிக்கை வாசித்தார். மாநில தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் தீர்மானவுரையாற்றினார். தேனி மாவட்டத் தலைவர் பி.செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத்தலைவர்கள் முன்னிலை வகிக்க, தேனி மாவட்ட சிறப்பாளர்கள் குத்துவிளக்கேற்றிட பொதுக்குழு இனிதே நடைபெற்றது.
பேரமைப்பின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள், துணை நிர்வாகிகள், பழைய பொருள் அணி, இளைஞர் அணி, இளம் தொழில் முனைவோர் அணி மற்றும் கிளைசங்க நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு பொதுக் குழு கூட்டத்தினை சிறப்பித்தனர்.
2026-ஆம் ஆண்டை பொருத்தவரை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் ஆண்டாக உள்ளது. வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகாண அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் அளிக்கப்பட்டு, பெரும்பாலான கோரிக்கைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்கு பொதுக்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


