மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம்பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேரில் கோரிக்கை

உள்ளாட்சிக்கடைகள் ஒருமுறை பெயர் மாற்றம், வணிகர்நலவாரிய உறுப்பினர் சேர்க்கைக்கு காலநீட்டிப்பு, மேலும், 6மாதம் நிறைவடைந்த நிலையில் நலவாரியப் பலன்கள், சில்லரை வணிகர் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம், வணிகர்களுக்கு ஓய்வூதியம், போன்ற பல்வேறு வணிகர் நலன் காக்கும் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் 27-11-2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். உடன் மாநிலப் பொருளாளர் ஹாஜி.ஏ.எம்.சதக்கத்துல்லா, மாநிலத் தலைமைச்செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, சென்னை மண்டலத்தலைவர் என்.டிமோகன், கும்பகோணம் மாவட்டத்தலைவர் சோழா சி.மகேந்திரன், செயலாளர் வி.சத்தியநாராயணன் மற்றும் பேரமைப்பு நிர்வாகிகள் உடனிருந்தனர். நன்றி!