14-9-2025 மயிலாப்பூர் மந்தைவெளி அனைத்து வியாபாரிகள் சங்க7ஆம் ஆண்டு குடும்ப விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மத்திய சென்னை மாவட்டம், மயிலாப்புர்&மந்தைவெளி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் 7ஆம் ஆண்டு குடும்ப விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் 14-9-2025 ஞாயிற்றுகிழமை மயிலாப்பூர், சாந்தோம் கம்யூனிட்டி ஹாலில் மாலை 5 மணியளவில் சங்கத் தலைவர் மயிலை சி.பாஸ்கர் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, மயிலாப்பூர்-மந்தைவெளி பகுதி ஏழை மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் 10, 12 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு பரிசுத்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார். மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை திரு. த.வேலு, மயிலாப்பூர் காவல்நிலைய துணை ஆணையாளர் திரு.வி.ஸ்ரீநிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்பித்தனர்.