
20-9-2025 சனிக்கிழமை ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற ஆஸ்ட்ரேலிய வணிகர்களின் தமிழ் பண்பாட்டு வளர்ச்சி கருத்தரங்கம் ஆஸ்ட்ரேலியா தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் ஆண்ட்ரூ சார்ல்டன் வி.றி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார். 500-க்கும் மேற்பட்ட ஆஸ்ட்ரேலிய தொழில் வணிகர்ள் பங்கேற்று, தமிழக வணிகர்களை உற்சாகத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர். மேலும், ஆஸ்ட்ரேலிய தொழில்&வணிகர்கள் நமது பேரமைப்புடன் வர்த்தக ரீதியான செயல்பாடுகளை மேற்கொள்ள முனைப்புடன் இருப்பதாக தெரிவித்தனர். தமிழ் பண்பாடு, கலாச்சாரம், பைந்தமிழின் பெருமைகள் அயல்நாட்டிலும் போற்றப்படுவது பெருமைக்குரியதாக உள்ளது என பேரமைப்புத் தலைவர் பெருமிதம் கொண்டார். உடன் கன்னியாகுமரி மண்டலத்தலைவர் டி.பி.வி.வைகுண்டராஜா, மாநிலத் துணைத்தலைவர் எஸ்.மகேஷ்வரன், மாநில இணைச் செயலாளர் டி.சாந்தகுமார், இளம்தொழில் முனைவோர் அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்.அலெக்சாண்டர், தலைவர் எம்.ஆனந்த், செயலாளர் எஸ். சுந்தரபாண்டியன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
